சனி, 29 ஜூலை, 2017

சாலையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பினிப் பெண்! July 29, 2017


சாலையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பினிப் பெண்!


ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாததால் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.

ராய்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பினி ஒருவர் பிரசவ வலியுடன் வந்துள்ளார். பெண்ணை முறையாக சோதனை செய்யாத மருத்துவர்கள், பிரசவத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது எனக்கூறி மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். வலியால் துடித்த பெண் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மருத்துவர்கள் அவரை பொருட்படுத்தாமல் வெளியே அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தின் எதிரிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அருகில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “ கடுமையான பிரசவ வலியுடன் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் சிகிச்சைக்காக அப்பெண்ணை அனுமதிக்கப்படாததால், மருத்துவமனையை விட்டு வெளியேறீனார்.அப்பெண்ணுக்கு சாலையிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் ஆனது” என தெரிவித்தார். 



இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,  “அப்பெண் பிரவசத்திற்காக மருத்துவமனைக்கு வந்தார், ஆனால் இங்கு ஏற்கனே நிறைய பெண்கள் பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால், தனக்கு சிகிச்சை அளிக்க காலத்தாமதம் ஆகுமோ என்று எண்ணி அப்பெண்ணே மருத்துவமனை விட்டு வெளியேறிவிட்டார். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை” என தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் கமிஷ்னர் சுமன் ஷர்மா, இதுகுறித்து ஆராய ஒரு விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும், மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.