சென்னை மெரினா கடற்கரையில் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வருமாறு சமூக வலைதளங்களில் சிலர் அழைப்பு விடுத்திருந்ததால், 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்த கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.