சனி, 29 ஜூலை, 2017

வருமான வரி செலுத்த நாளை மறுநாள் கடைசி நாள்! July 29, 2017

வருமான வரி செலுத்த நாளை மறுநாள் கடைசி நாள்!


வருமான வரி செலுத்துவோர் நாளை மறுநாளுக்குள்  தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை நீட்டிக்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் விடுமுறை நாளான நாளையும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் வரி செலுத்துபவர்களில் சில பிரிவினர் 2017-18-ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இந்த தேதியை நீட்டிக்க முடியாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ள நிலையில், கணக்கு தாக்கல் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வருமானவரித் துறை செய்துள்ளது. 

Related Posts: