சனி, 29 ஜூலை, 2017

போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்! July 29, 2017

போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்!


சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து போரூர் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியின் கரைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், காவல்துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதனை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், கடந்த 2 மாதங்களில் காவல்துறை சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருவதாக கூறிய அவர், போரூர் ஏரிக்கரையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார். போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.