சனி, 29 ஜூலை, 2017

காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்த மாட்டார்கள்: மெஹ்பூபா முஃப்தி..!! July 29, 2017

​காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்த மாட்டார்கள்: மெஹ்பூபா முஃப்தி..!!


காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்தால் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் யாரும் இந்திய தேசியக் கொடியை ஏந்தமாட்டார்கள் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவை பிரதிபளிக்கும் வகையில் செயல்பட்டவர் இந்திரா காந்திதான் என கூறினார். இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா என அறியும்படி வாழ்ந்தவர் என அவர் கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளை கைது செய்வது மட்டுமே நிரந்தர தீர்வாகது என குறிப்பிட்டுள்ள மெகபூபா, மக்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை அதிகரித்திடுவதே தீர்வாக அமைந்திடும் என தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 35-ஏ-வில் திருத்தம் கொண்டு வர மெகபூபா எதிர்ப்பு தெரிவித்தார். 

நாட்டின் முதல் குடியரசு தலைவரான பாபு ராஜேந்திர பிராசத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முனையுமானால், காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை தங்கள் கைகளில் ஏந்த மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.