வெள்ளி, 28 ஜூலை, 2017

சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய பாஜக தொண்டர்கள்! July 28, 2017


சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய பாஜக தொண்டர்கள்!


கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

நேற்றிரவு திருவனந்தபுரத்தில் பாஜகவின் மாநிலத் தலைமையகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களால் அடித்து சூறையாடப்பட்டுள்ளது. 

இதற்குப் பதிலடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் வீட்டை பாஜக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

கல்லெறிந்ததில் வீட்டின் சன்னல் கண்ணாடிகளும், கார் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. இதேபோல் இரு கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களின் வீடுகளும் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் இரு கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதலும் நடைபெற்றுள்ளது. இதையடுத்துத் தலைவர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

  • ஊடகங்களில் இன்றய நிலை.. ************************************* உன்மை ; ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிமின் சைக்கிளில் டியூப் வெடித்தது. செய்தி ; சக்தி வாய்ந்த குண்… Read More
  • SIR.... சார்....!!! என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...அதன் அர்த்தம் என்ன......??? SLAVE I REMAIN... என… Read More
  • வாட்ஸ் அப் காலிங் வாட்ஸ் அப் காலிங் வசதிக்கு வாங்க! (இந்தியர்களுக்கு) “வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. … Read More
  • நீங்கள் சவூதி அரேபியாவில் இருக்கிறீர்களா இதனைக் கட்டாயம் படியுங்கள். முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா தேதி காலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தர மறுக்கிறாரா? நீங்கள் நல்ல… Read More
  • Thasiltar m94450 004864 Mylapore-Triplicane 94450 004875 Mambalam-Guindy 94450 004882 திருவள்ளூர் மாவட்டம்6 Ambattur 94450 004897 Ponneri 94450 … Read More