வெள்ளி, 28 ஜூலை, 2017

டிஜிபி ராஜேந்திரன் மீதான குட்கா லஞ்ச புகார்கள் குறித்து விசாரிக்க குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு..!! July 28, 2017

​டிஜிபி ராஜேந்திரன் மீதான குட்கா லஞ்ச புகார்கள் குறித்து விசாரிக்க குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு..!!


தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு டிஜிபி ராஜேந்திரன் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்டவை விற்பனை செய்ய அரசியல்வாதிகள், காவல் உயரதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக, வருமானவரித்துறை குற்றம் சாட்டியிருந்தது. 

இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஏஐடியுசி செயலாளர் கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், லஞ்ச புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், லஞ்சப்புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார். 

இந்நிலையில், குட்கா புகார் தொடர்பாக தமிழக அரசுக்கு, வருமான வரித்துறை சார்பில் கடிதம் வரவில்லை என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், டிஜிபி பணி நியமனம் சரிதான் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, குட்கா புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தலைமையில் குழு அமைத்து 2 வாரத்துக்குள் விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டது.