வெள்ளி, 28 ஜூலை, 2017

சீனா -இந்தியா எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா..? July 28, 2017


சீனா -இந்தியா எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா..?


பூடான் நாட்டில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்திய சீன ராணுவ படைநிறுத்தம் சுமார் 40 நாட்களாக நீடிக்கிறது. 

இந்நிலையில், சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் சந்திப்பு நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இதில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.

நேற்று சீன பாதுகாப்பு அதிகாரி யாங் ஜெய்ச்சியுடன் அஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், டோக்லாம் படைநிறுத்தம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் சீன அதிபர் ஜூ ஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன அதிபரைச் சந்தித்து பேசியுள்ளார். 

கடந்த சில நாட்களாக இந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவப்படைகளும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.