வெள்ளி, 28 ஜூலை, 2017

Play Store-இல் இருந்து அதிரடியாக 20 Android App-களை நீக்கிய Google! July 28, 2017

Play Store-இல் இருந்து அதிரடியாக 20 Android App-களை நீக்கிய  Google!


பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை திருடும் 20 Android App-களை Play Store-இல் இருந்து Google நீக்கியுள்ளது.

பல்லடுக்கு உளவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டாளர்களின் இமெயில், மெஸேஜ்கள், இடங்கள் மற்றும் படங்கள் உள்ளிட்ட மீடியா ஃபைல்களை Play Store-இல் உள்ள 20 App-கள் ரகசியமாக திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவற்றை Play Store-இல் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.

இந்த App-கள் பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் உள்ள இடங்கள் (Location) மற்றும் Gallery Phots திருடுவதுடன், போன்களை ரெக்கார்ட் செய்வதுடன், நமது மொபைல் கேமராவை இயக்கி போட்டோ எடுப்பதும், WhatsApp, Viber, Telegram உள்ளிட்டவற்றில் வரும் மெஸேஜ்களை இடை மறித்து படிப்பதும் தெரியவந்துள்ளது.

Lipizzan எனப்படும் இந்தவகை App-கள் இரண்டு கட்டங்களாக செயல்படுவது தெரியவந்துள்ளது. Google Play மூலம் 'Cleaner' அல்லது ‘Backup' என்ற பெயரில் நமது மொபைல் போனில் நுழையும் இவை, 'License Verification' என்ற இரண்டாவது கட்டத்தில் நமது அனுமதி பெற்று, போட்டோகளையும், முக்கிய தகவல்களையும் App உருவாக்கியவருக்கு அனுப்பத் தொடங்கும்.