ஞாயிறு, 30 ஜூலை, 2017

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுட்டுக் கொலை! July 30, 2017

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுட்டுக் கொலை!


மணிப்பூர் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆயுதம் ஏந்திய போராளி குழுவொன்றால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலின் தேரா புக்ரம்பர் லெய்ராக் பகுதிக்கு திடீரென வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவினர், காரில் இருந்து கண்களை கட்டிய நிலையில் நபர் ஒருவரை கீழே இழுத்துப் போட்டு, வானத்தை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

அருகே வீடுகளில் இருந்தவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டு மாடிகளில் இருந்தும், வாசலில் இருந்தும் எட்டிப்பார்த்த வேளையில், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். படுகாயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 43 வயதான ஐரோம் போபோ என்பவர் என்றும், 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக அவரை, அரசால் தடை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விடுதலை முன்னணி (UNLF) ஆயுதம் தாங்கிய அமைப்பை சேர்ந்தவர் சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UNLF அமைப்பு தனிநாடு கோரிக்கைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வருவதால் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டு உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் சில காலம் சிறையில் இருந்த இரோம் போபோ ஜாமினில் வெளிவந்திருந்தார். இந்நிலையில், பிறருக்கு எச்சரிக்கும் வகையிலான ‘முன்னுதாரணமான தண்டனை’ என இதனை UNLF அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளது.

Related Posts: