திங்கள், 31 ஜூலை, 2017

இந்தியா-சீனா இடையே பதற்றம்! July 31, 2017

இந்தியா-சீனா இடையே பதற்றம்!


சீனாவின் சுரிகி மாகாணத்தில் சீன மக்கள் விடுதலை படையை சேர்ந்த 5 படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டு இந்த சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது .சீனாவின் வடக்கே  அமைந்து சூரிகி போர் படை விமான தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 12 ஆயிரம் ராணுவ வீர ர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் ,ராணுவ தளவாடங்கள் ,பாதுகாப்பு டாங்கிகள் ,போர் விமானங்கள்,ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் கலந்து கொண்டன. 

இதில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,சீனா மீது, உலகின் எந்த நாடு போர் தொடுத்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சீன ராணுவத்தால் எந்த எதிரிகளையும் வீழ்த்த முடியும் என்று அணி வகுப்பு மரியாதையை ஏற்ற பின் சீன அதிபர் ஜிஜுன்பிங் இவ்வாறு தெரிவித்தார் . 

இந்தியா -சீன எல்லை பிரச்சினை பதற்றமாடன சூழலில் இந்த அணிவகுப்பு ,சீன அதிபரின் பேச்சு மறைமுகமாக இந்தியாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுவதால் இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.