முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவ வழிபாட்டை விரும்பாதவர் என்பதால், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்திலிருந்து அவரது சிலையை அகற்ற வேண்டும் என அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், அப்துல்கலாம் குறித்து அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
அவரை புரிந்து கொண்டிருந்தால் அவருக்கு சிலை வைப்பதை தவிர்த்திருப்பார்கள் என்று கூறிய பொன்ராஜ், அப்துல்கலாம் மத அடையாளத்தை விரும்பாதவர் என்றும், திருக்குறள் மட்டுமே அவருக்கு பிடித்த நூல் என்றும் கூறினார். அவரது சிலையை அகற்றக்கோரி பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும், சிலையை அகற்றாவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடருவது குறித்து பரிசீலிப்போம் என்றும் பொன்ராஜ் கூறினார்.