ஞாயிறு, 30 ஜூலை, 2017

வீடுகளை ஸ்கேன் செய்யும் அமேசான் ட்ரோன்கள்! July 27, 2017

வீடுகளை ஸ்கேன் செய்யும் அமேசான் ட்ரோன்கள்!


அமேசானின் டெலிவரி ட்ரோன்கள் பொருட்களை கொண்டு வரும் போது வாடிக்கையாளர்களின் வீட்டை முழுவதுமாக ஸ்கேன் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வீட்டில் எந்த பொருள் இல்லை என்பதை ட்ரோன்கள் கண்டறியும் என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பொருட்கள் குறித்த விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கும் இணைய வழியாக அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

இதனால் ஆதாயத்தை விட தொந்தரவு தான் அதிகம் என சில நெட்டிசன்கள் அமெசானை திட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது இந்த தொழிநுட்பம் தனிமனித அந்தரங்கத்தில் அனுமதியின்றி நுழைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.