மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற, தனது எம்எல்ஏக்களை ஈர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ள புகார் குறித்து, பதிலளிக்குமாறு, குஜராத் அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குஜராத்தில் இருந்து காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், பாஜகவிற்கு தாவினர். தனது எம்எல்ஏக்களை ஈர்ப்பதற்கு பாஜக முயற்சித்து வருவதாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துமாறும், குஜராத் அரசை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.