வெள்ளி, 28 ஜூலை, 2017

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்களிடையே ஐ.டி பிரிவிற்கான மோகம் குறைந்தது..!! July 28, 2017

​பொறியியல் கலந்தாய்வில் மாணவர்களிடையே ஐ.டி பிரிவிற்கான மோகம் குறைந்தது..!!


பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் இந்த ஆண்டு ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. 

இதில் இதுவைரை 28,488 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் 21ஆயிரத்து 51 பேர் பங்கேற்று தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். 7,283 பேர் இதுவரை கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 

படிப்புகளை பொருத்தவரை எல்க்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பில் அதிகப்படியாக 4,622 பேர் சேர்ந்துள்ளனர். மெக்கானிக்கல் படிப்பை 3,334 பேர் தேர்வு செய்துள்ளனர். 

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளால், ஐடி படிப்பை மாணவர்கள் குறைந்த அளவிலேயே இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளனர். இதுவரை நடந்த கலந்தாய்வில் ஐடி படிப்பை வெறும் 1,400 மாணவர்கள் மட்டுமே எடுத்துள்ளனர்