சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 கொரனோ நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (ஆர்.ஜி.ஜி.ஜி.எச்) தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யூ), டவர் 3-ல் அனுமதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள், ஆக்ஸிஜன் ஓட்டத்தில் அழுத்தம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இறந்துள்ளனர். அதனைத் தமிழக சுகாதாரத்துறை முழுமையாக மறுத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் ஏற்கெனவே பல்வேறு உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்களின் ஆபத்தான நிலையே அவர்களின் மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த திங்கள் இரவு, திரவ ஆக்ஸிஜன் இறக்கப்பட்டது, அழுத்தத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இந்த அழுத்தம் வீழ்ச்சி டவர் -3 க்கு பரவியது. அதைத் தொடர்ந்து வென்டிலேட்டரில் இருந்த இரண்டு நோயாளிகள் 30 நிமிட இடைவெளியில் இறந்திருக்கின்றனர். ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்ட மீதமுள்ள 81 நோயாளிகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திங்கள்கிழமை இரவு 8.45 மணியளவில் சென்னையின் புறநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 54 வயது பெண்ணும், 11 நாட்கள் அனுமதிக்கப்பட்ட 62 வயது ஆணும் இறந்திருக்கின்றனர்.
“இறந்துபோன இருவரும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். அந்தப் பெண் மிகவும் ஆபத்தான நிலையில் இங்கு மாற்றப்பட்டு மயக்கமடைந்தார். கடுமையான ரத்த சோகையுடன் பல இணை நோய்கள் அவருக்கு இருந்தன. அவர் கோவிட் -19 க்கு நெகட்டிவ் முடிவுகளையே பரிசோதித்திருந்தார். ஆனால், நாங்கள் அவரை டவர் -3-ல் அனுமதித்தோம். அங்கு கோவிட் -19-க்கு பாசிட்டிவ் சோதனை செய்யும் நோயாளிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவருக்கு கோவிட் -19-ன் மருத்துவ வெளிப்பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த ஆண், ஊனமுற்றவர் மற்றும் கோவிட் -19-க்கு நெகட்டிவ் முடிவுகளைப் பரிசோதித்தார். ஆனால், அவருக்குக் கடுமையான நுரையீரல் கோளாறு இருந்தது. மேலும், அவருக்கு சிபிஏபி வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. ஆக்ஸிஜன் ஓட்டத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால், அழுத்தத்தில் மாற்றம் இருந்தது. இந்த அழுத்தத்தின் வீழ்ச்சி, சில நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டது. நோய்வாய்ப்பட்ட இந்த இரண்டு நோயாளிகளும் தங்கள் நோய் காரணமாக 30 நிமிட இடைவெளியில் இறந்தனர்” என்று மருத்துவமனை ஆணையம் தெரிவித்துள்ளது.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/two-patients-on-ventilator-died-at-rajiv-gandhi-hospital-tamil-news-289471/