செவ்வாய், 15 மார்ச், 2022

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீ

 15 3 2022 

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவும் காட்டுத்தீ

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அகமலை வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ, காற்றின் காரணமாக வேகமமாக பரவியது. இதனால் வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும், காட்டுத் தீயில் இருந்து தப்பித்த வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விளைநலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வடகரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 2 நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் எராளமான மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும், மஞ்சத்தேரி, வெள்ளக்கால்தேரி ஆகிய பகுதிகளில் தீ பரவியதால், தீயை அணைக்க தன்னார்வலர்களும் ஈடுபடலாம் என வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

source https://news7tamil.live/wildfires-spreading-in-the-western-ghats.html

Related Posts: