வியாழன், 3 மார்ச், 2022

உக்ரைன் எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்… போலந்து நாட்டுக்குள் நுழைவதில் என்ன சிக்கல்?

 2 3 2022 


Russia Ukraine Crisis
Around 2000 Indians have entered Poland

வெளியுறவு அமைச்சகம் (MEA) “சிக்கல் பகுதி” என்று ஒப்புக்கொண்ட போலந்து எல்லை வழியாக, செவ்வாய் கிழமை நண்பகல் வரை 2,000 பேர், முக்கியமாக மாணவர்கள், போலந்து நாட்டுக்குள் நுழைந்தனர்.

இந்தியாவுக்கான போலந்தின் தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி’ தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், காலை 7 மணி வரை (போலந்து நேரப்படி)  சுமார் 1,700 இந்தியர்கள் போலந்துக்கு பாதுகாப்பாக வந்துள்ளனர்.

ஏற்கனவே நான்கு லட்சம் பேர் வந்துள்ளனர். ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் யாரையும், எத்தனை பேரையும் ஏற்றுக்கொள்ள போலந்து தயாராக உள்ளது. நாங்கள் தேசியத்தைப் பார்க்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் இன்னும் உறைபனியில், குறிப்பாக ஷெஹினி-மெடிகா எல்லை சோதனைச் சாவடியில். சிக்கித் தவிக்கின்றனர். உக்ரேனிய மற்றும் போலந்து எல்லைப் படைகளால் பாகுபாடு காட்டப்படுவதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் புரகோவ்ஸ்கி தனது நாட்டின் மீதான எந்த பாகுபாட்டையும் வெளிப்படையாக மறுத்தார்.

“இது முற்றிலும் போலியானது. நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. வரும் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறோம். இந்தியர்களும் விசா இல்லாமல் உள்ளே செல்ல அனுமதித்துள்ளோம்,” என்றார்.

எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவதில் “தளவாட சிக்கல்கள்” இருப்பதையும் தூதர் ஒப்புக்கொண்டார். “எல்லையில் லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இரு நாடுகளின் (உக்ரைன் மற்றும் போலந்து) எல்லைப் போலீஸ் உதவ முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஆனால் பெரிய கூட்டம் உள்ளது. ஒரு லட்சம் பேரை ஐந்து நிமிடத்தில் கடக்கச் சொல்ல முடியாது. காத்திருப்பு நேரம் அதிகம் தான், ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ”என்று புரகோவ்ஸ்கி கூறினார். “எல்லைச் சோதனைச் சாவடியில் இடம் குறைவாக உள்ளது, உங்களுக்குத் தெரியும். அத்தகைய இடத்தில் ஒரு லட்சம் பேரை எப்படி தங்க வைப்பது?” என்று கூறினார்.

இதற்கிடையே’ ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/around-2000-indians-have-entered-poland-says-ambassador-of-poland-to-india-419068/