ஞாயிறு, 9 அக்டோபர், 2022

பொட்டாசியம் மிகுதியான உருளைக் கிழங்கு: மாரடைப்பை தடுக்கும் தெரியுமா?

 

 உருளைக்கிழங்கு எப்போதும் பல தவறான எண்ணங்களால் சூழப்பட்ட உணவாக இருந்து வருகிறது. உருளைக்கிழங்கு எப்படி நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது அல்லது இதய நோயாளிக்கு எப்படிக் கேடு விளைவிக்கிறது போன்ற தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கட்டுக்கதையாகவே உள்ளன.

அவ்வகையில், இதய நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கு ஏன் சிறந்தது என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம். எந்த காய்கறியும், வறுத்த பிறகு சாப்பிட்டால், உங்களுக்கு ஆரோக்கியமற்றது. உருளைக்கிழங்குக்கும் அப்படித்தான். ஆனால் வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த உருளைக்கிழங்கு போன்றவற்றை குறைந்த அளவு உண்ணும் போது, ​​அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

இதய நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கு நல்லது என்பதற்கான காரணங்கள்:

  1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் இதயத்தின் செயல்பாட்டிற்கு தேவையான மிக முக்கியமான கனிமங்களில் ஒன்றாகும். இது உடல் வழியாக இரத்தத்தை செலுத்துவதற்கு இதயத்திற்கு உதவுகிறது மற்றும் அடிப்படையில் இதயத்தை துடிக்க வைக்கிறது. எனவே, உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

  1. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது

உருளைக்கிழங்கில் கரையக்கூடிய நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் எல்டிஎல் அளவைக் குறைக்க உதவுகின்றன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  1. இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

உருளைக்கிழங்கில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் மெக்னீசியம், நியாசின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 6 உள்ளிட்ட இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு முறைக்கு பங்களிக்கின்றன. கூடுதலாக, உருளைக்கிழங்கில் சோடியம் உள்ளடக்கம் குறைவாக உள்ளது.

உடற்பயிற்சிகளை தவிர இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயல்பாட்டில் நமது உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உணவைப் பற்றி ஒருவர் பேசும்போது, ​​சில உணவுகள் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. பொதுவாக, மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

source https://tamil.indianexpress.com/food/how-potatoes-good-for-heart-health-reasons-in-tamil-522214/