ஞாயிறு, 9 அக்டோபர், 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: மீறினால் என்ன தண்டனை?

 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் தண்டனை விவரங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத சிறை, ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்

சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம்/ நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும்.

ஆணையத்தால் விதிக்கப்படும் இந்த தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/government-banned-online-rummy-in-tamil-nadu-522261/