உங்கள் ஆதார் அட்டைக்கு 10 வருடங்கள் பழமையானதா? அப்படியானால், 2022 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆகிய இரண்டு முக்கிய ஆவணங்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.
சுருக்கமாக கூறினால், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் அவர்களின் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் 09 நவம்பர் 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
மேலும், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, ஆதார் ஆவணங்களில் தங்கள் ஆதார ஆவணங்களை புதுப்பிக்கலாம்.
குறிப்பிடப்பட்ட கட்டணத்துடன் ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு ஆவணத்தை புதுப்பிக்கும் வசதியை UIDAI வழங்குகிறது, இதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்பவர் ஆதார் தரவுகளில் தனிப்பட்ட அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆவணங்களைப் புதுப்பிக்க முடியும்.
இந்த வசதியை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அணுகலாம். ஆன்லைனில், “எனது ஆதார் போர்ட்டல்“என்ற தளத்தில (https://myaadhaar.uidai.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.
source https://tamil.indianexpress.com/uncategorized/aadhaar-renewal-every-10-years-mandatory-540321/