திங்கள், 14 நவம்பர், 2022

சென்னை ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகமாக பயன்படுத்துகிறார் ஆளுநர்

 

சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க  அலுவலகமாக செயல்படுகிறது என புதுச்சேரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாட்டில் பேசினார்.

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக கூட்டணி இருப்பது, இரட்டை ரயில் என்ஞின் போன்றது. பா.ஜ.க உள்ள இடங்களில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை இதற்கு உதாரணம் உத்திர பிரதேசம் என்றவர்.

மேலும்,‘மொழி பிரச்சினையில் இந்தி தான் வேண்டும் என மத்திய அரசும், தாய் மொழி தான் வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது. இதுவே இரட்டை ரயில் என்ஜினுக்கு உதாரணம் என பேசிய அவர் பள்ளி கல்வி என்பது மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டது. எந்த மாநில அரசாங்கத்தையும் கலந்து ஆலோசிக்காமல் புதிய கல்வி கொள்கையை பா.ஜ.க அரசு அமல்படுத்த உள்ளது. இது அவர்களின் பாசிசத்தை காட்டுகிறது, புதிய கல்வி கொள்கையை மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் தடுத்து நிறுத்தும் என உறுதிப்பட சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ‘சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது. துணை ஜனபாதி ஆகலாம் என கிரன்பேடி செயல்பட்டார். ஆனால் அவர் வேலை முடிந்த உடன் கிள்ளுக்கீரை போல் அவர் மோடி மற்றும் அமித்ஷாவால் தூக்கி வீசப்பட்டார்.

தற்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். இதே நிலைமை தான் நாளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மற்றும் கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோருக்கு ஏற்ப்படும் என பேசினார்.



source https://news7tamil.live/chennai-governors-house-serves-as-tamil-nadu-bjp-office-g-ramakrishnan.html

Related Posts: