1 11 2022
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புதன்கிழமை (நவ.2) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னையில் சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் குடும்ப நிகழ்வில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை வருகிறார். அப்போது மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மே 2021 இல் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு மீண்டும் கூடியது.
தொடர்ந்து, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் வரையிலான எதிர்க்கட்சித் தலைவர்களை பானர்ஜி சந்தித்தார்.
மேலும், பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி TMC யின் விரிவாக்கத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றியதால், அக்கட்சி தனது அமைப்பை பல வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் அசாம் போன்றவற்றில் வலுப்படுத்த முயன்றது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அக்கட்சி ஆதரவு அளித்தது.
ஆனால் கோவாவில் தேர்தல் தோல்வி மற்றும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸின் திட்டங்கள் தொய்வை சந்தித்தன.
எனினும் மம்தா பானர்ஜி, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக BJP-க்கு எதிரான முன்னணியை உருவாக்கும் நம்பிக்கையை கைவிடவில்லை. செப்டம்பரில் நடந்த TMC பேரணியில், 2024-ல் பாஜகவை தோற்கடிக்க மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்திய தலைவர்களுடன் கைகோர்ப்பேன் என்று கூறினார்.
பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்ப்போம். நாமெல்லாம் ஒரு பக்கம், பாஜக மறுபக்கம். 2024 தேர்தலில் 300 இடங்கள் என்ற பா.ஜ.க.வின் ஆணவமே அதன் எதிரியாக இருக்கும்” என்றார்.
மேலும், பாரத் ஜோடோ யாத்ரா” மூலம் நாட்டில் காங்கிரஸின் வேகம் அதிகரித்து வருவதாகக் கருதப்பட்ட நிலையில், டிஎம்சி மீண்டும் பிராந்தியக் கட்சிகளை அணுகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், “திரிணாமுல் காங்கிரஸ் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதன் நோக்கத்தை ஒருபோதும் இழக்கவில்லை. கட்சியின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பல விஷயங்கள் நடந்தன. அவை தீர்க்கப்பட்டவுடன், கட்சி அதன் தேசிய திட்டங்களை மீண்டும் தொடங்கும்” என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், தேசிய அளவில் கட்சியின் செயல்பாடுகள் இல்லாததற்கு பண்டிகைக் காலம்தான் காரணம் என்று கூறினார்.
தொடர்ந்து அவர், “இந்தப் பண்டிகை காலம் முடிந்ததும், தேசிய அரசியலுக்கான தலைமை தனது பணியை மீண்டும் தொடங்கும். நமது தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் கண் அறுவை சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ளார்.
அவர் சகஜ நிலைக்கு திரும்பியவுடன், எங்கள் கட்சித் திட்டங்களைச் செயல்படுத்த கட்சி முழு உந்துதலைக் கொடுக்கும், ”என்றார்.
முதலமைச்சர் மீதான எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடர்ந்து செய்துவருகிறார். இந்தத் திட்டங்கள் தோல்வியுறும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், “2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அவர் முயற்சிகள் மேற்கொண்டார். அந்த முயற்சிகள் தோற்று போகின. அதேபோல் இம்முறையும் அவர் தோல்வியுறுவார் எனக் கூறினார்.
மற்றொரு பாஜக மூத்தத் தலைவர் ராகுல் சின்கா, “மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் சந்திப்பு முற்றிலும் அர்த்தமற்றதாக இருக்கும்” என்றார். மேலும் கடந்த காலங்களில் திரிபுரா, கோவா, உத்தரப் பிரதேசம் என மம்தா தோல்வியை தழுவியுள்ளார்” எனக் கூறினார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “இந்திய அரசியலில் அவர் இழந்த நற்சான்றிதழ்களை மீட்டெடுக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை” என்றார்.
மேலும், “ஆளுநரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள பானர்ஜி ஏன் சென்னை செல்கிறார். மேற்கு வங்காளத்திற்கு மற்றொரு ஜக்தீப் தன்கர் ஆளுநராக வரக்கூடாது என்பதற்காக, மத்திய அரசுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள இது ஒரு தந்திரம் என்று நான் நினைக்கிறேன்.
இதுமட்டுமின்றி தேசிய அரசியலில் அவர் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் இதற்கு முன்பு பல தலைவர்களுடன் இதுபோன்ற பல சந்திப்புகளை நடத்தினார், ஆனால் அவை மோசமாக தோல்வியடைந்தன. இதனால்தான் ஸ்டாலினுடன் இந்த சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். இந்திய அரசியலில் அவர் இழந்த பொருத்தத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இதை நான் பார்க்கிறேன்” என்றார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கஜன் சக்ரவர்த்தி, “மேற்கு வங்கத்தில் மக்கள் வேலை கேட்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மம்தா ஏதோ சாக்குப்போக்கு சொல்லி சென்னை செல்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
source https://tamil.indianexpress.com/india/mamata-likely-to-meet-stalin-tomorrow-sparks-talk-of-tmcs-renewed-national-push-534781/