வியாழன், 3 நவம்பர், 2022

பெட்ரோல், டீசல், தங்கம் இன்று என்ன ரேட்?

 இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை வைத்தும் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்தும் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றது.

அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதியில் இருந்து சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கம் சவரனுக்கு ரூ.208 சரிவு: 

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 37,480 ஆக உள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. 8 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 40,880 ஆக உள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை சீராக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 58,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.800 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,715 ஆகவும், சவரனுக்கு ரூ.37,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,144 என சவரனுக்கு ரூ. 41,152 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.64க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.64,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


source https://tamil.indianexpress.com/business/petrol-and-diesel-price-in-chennai-on-03rd-november-535491/