திங்கள், 14 நவம்பர், 2022

சிலை கடத்தலில் இபிஎஸ் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும் – புகழேந்தி

 

சிலை கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்க வேல் விளக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி அண்மையில், கொள்கை பரப்பு செயலாளராக அணிவித்து ஓபிஎஸ் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று புகழேந்தி, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் தன்னை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்ததை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன் என்றார்.

சிலை கடத்தலில் பழனிசாமியின் பங்கு என்ன என்பதை பொன்மாணிக்கவேல் விளக்க வேண்டும். உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை, இன்னும் எத்தனை வழக்குகளில் பழனிசாமி இருக்கப் போகிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என குற்றம்சாட்டினார். சிலை கடத்தலில் சம்மந்தப்பட்ட அந்த 2 அமைச்சர்கள் யார்? என்பதை பொன் மாணிக்கவேல் வெளியிட வேண்டும். அந்த 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி என்று சந்தேகிக்கிறோம் என புகழேந்தி கூறினார்.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் நியமிக்கப்பட்டிருந்த போது அவரை மாற்ற வேண்டுமென்றவர் எடப்பாடி பழனிசாமி என்ற அவர், சிலை கடத்தலில் 2 அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு பிறகு தான் உள்துறை அமைச்சராக இருந்த பழனிசாமி பொன்மாணிக்கவேலை மாற்ற முயன்றார் என புகழேந்தி குற்றம்சாட்டினார்.


source https://news7tamil.live/ponmanikavel-should-explain-the-role-of-eps-in-idol-smuggling-pugazhenthi.html

Related Posts: