புதன், 9 நவம்பர், 2022

இடஒதுக்கீடு கந்துவட்டியாக மாற அனுமதிக்கக் கூடாது’.. EWS தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

 கல்வி மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பின் 103 வது திருத்தத்தின் செல்லுபடியை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும் இரண்டு நீதிபதிகள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீர்ப்பளித்திருந்தனர்.

அதாவது, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, நீதிபதி பேலா எம் திரிவேதி மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்,
EWS க்கான இடஒதுக்கீடு குறித்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று கூறினர். இதற்கு நீதிபதி எஸ்.ரவீந்திர பட் மறுப்பு தெரிவித்தார். அவரின் கருத்தோடு தலைமை நீதிபதி யூயூ லலித்தும் உடன்பட்டார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு (EWS) சமத்துவம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. தற்போதுள்ள இடஒதுக்கீட்டிற்கு கூடுதலாக இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளை மீறாது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “கல்விக்கான ஏற்பாடுகளை அரசை அனுமதிப்பதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்பை மீற முடியாது. EWSக்கான 50% உச்சவரம்பு வரம்பின் அடிப்படையில் அடிப்படை கட்டமைப்பை மீறுவதில்லை, ஏனெனில் உச்சவரம்பு வரம்பு நெகிழ்வற்றது” என்றார்.

நீதிபதி பீலா எம் திரிவேதி, ““சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் தனித்தனி பிரிவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களை ஒதுக்கப்படாத பிரிவினருக்கு இணையாக நடத்த முடியாது. EWS இன் கீழ் உள்ள பலன்களை பாரபட்சமானது என்று கூற முடியாது” என்றார்.

நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “இடஒதுக்கீடு என்பது சம வாய்ப்பு என்ற சாராம்சத்திற்கு எதிரானது. 103 ஆவது திருத்த நடைமுறைகள் பாகுபாட்டின் வடிவங்களை தடை செய்துள்ளன” என்றார்.

மேலும், “சமமான அணுகலை செயல்படுத்துவதற்கான சக்திவாய்ந்த கருவியாக இடஒதுக்கீடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், பொருளாதார அளவுகோல்களை அறிமுகப்படுத்தி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி போன்றவர்களைத் தவிர்த்து, பலன்கள் இருப்பதாகக் கூறுவது அநீதியாகும்” என்றார்.

தொடர்ந்து, “பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரில் இருந்து SC/ST/OBCகளில் உள்ள ஏழைகளை விலக்கி, அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்யப்பட்ட பாகுபாடுகளை இந்த திருத்தம் நடைமுறைப்படுத்துகிறது” என்றார்.

நீதிபதி பார்திவாலா, “இட ஒதுக்கீடு ஒரு முடிவல்ல, அது ஒரு வழி. இது கந்து வட்டியாக மாற அனுமதிக்கக் கூடாது” என்றார்.


source https://tamil.indianexpress.com/india/supreme-court-upholds-10-quota-for-ews-top-quotes-from-verdict-537722/

Related Posts: