பி.எஸ்.என்.எல் நிறுவனம் மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமாகும். ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் சேவை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் வளர்ச்சியால் பி.எஸ்.என்.எல் அதன் பெரும் பயனர்களை இழந்துள்ளது. அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர். பி.எஸ்.என்.எல் மொபைல் டேட்டா சேவைகள் பயனர்களை இழந்துள்ளது. இருப்பினும் பிராட்பேண்ட் திட்டங்களை பலரும் பயன்படுத்துகின்றனர்.
வைஃபை பிராட்பேண்ட்களுக்கு பி.எஸ்.என்.எல் சேவைகள் சிறப்பாக உள்ளன. குறைந்த விலையில் அதிக பயன்களை கொடுக்கிறது. அந்தவகையில் தற்போது ரூ.499 விலையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய திட்டத்திலிருந்து கூடுதலாக பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் முன்பே ரூ.499 விலையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதிலிருந்து இந்த திட்டம் புதிய பெயரில் கூடுதல் சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரூ.499 ஃபைபர் திட்டம்
ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி உள்ளது. 40 Mbps இணைய வேகத்துடன் மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. FUP வசதி உள்ளது. இந்த திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு பி.எஸ்.என்.எல் ஆன்லைன் தளத்திலோ அல்லது கடைகளிலோ தெரிந்து கொள்ளலாம்.
NEO பிராட்பேண்ட் திட்டம்
பி.எஸ்.என்.எல் ஃபைபர் அடிப்படை NEO பிராட்பேண்ட் திட்டமும் ரூ. 449 வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் பயனர்கள் 30 Mbps இணைய வேகத்தை பெற முடியும். மாதம் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் பயனர்கள் அன்லிமிடெட் காலிங் வசதி பெறலாம்.
2 திட்டங்கள் இனி இல்லை
இதற்கிடையில் பி.எஸ்.என்.எல் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்ட சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. நவம்பர் 15, 2022 முதல் இந்த சேவை நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையு
source https://tamil.indianexpress.com/technology/bsnl-introduces-new-rs-499-broadband-plan-get-every-details-here-538060/