16 12 2022
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று ஆட்டோரிக்ஷாவில் பிரஷர் குக்கர் வெடித்துச் சிதறியதில் பயங்கரவாதி ஒருவர் காயமுற்றார்.
இது, தரவு திருட்டு ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக மேற்கொண்ட முயற்சி என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் வியாழக்கிழமை (டிச.15) ஒரு ஊடக உரையாடலில், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனத்தால் (IED) குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு, நவம்பர் 19 அன்று மாநில காவல்துறையால் முன்கூட்டியே பயங்கரவாத செயல் என்று கூறப்பட்டது.
இது பாஜகவின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று குற்றம் சாட்டினார். மேலும், இது, தரவு திருட்டு ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜக மேற்கொண்ட முயற்சி என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
தொடர்ந்து குக்கர் குண்டுவெடிப்பு, வாக்குச் சீட்டு விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள்” என்றார்.
முன்னதாக, நவம்பர் 19ஆம் தேதியன்று, மங்களூரு நகரில் உள்ள ஆட்டோரிக்ஷாவில், இரண்டு வெவ்வேறு சட்ட விரோத செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாரிக், 23, என்ற சந்தேக நபர் பயணித்தார்.
அப்போது அவர் வைத்திருந்த ஒரு பையில் பிரஷர் குக்கர் ஐஇடியை தற்செயலாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்தக் குண்டுவெடிப்பில் பயங்கரவாதிக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில், குண்டுவெடிப்புக்குப் பிறகு, கர்நாடக காவல்துறைத் தலைவர் பிரவீன் சூட், ஆட்டோரிக்ஷாவில் தற்செயலான குண்டுவெடிப்பு சம்பவத்தை சமூக ஊடகங்களில் “பயங்கரவாதச் செயல்” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய டி.கே. சிவக்குமார், “இது மும்பை, டெல்லி அல்லது காஷ்மீர் போன்ற பயங்கரவாதச் செயலா? குண்டுவெடிப்பை பெரிதுப்படுத்தி காட்டி வாக்குகளைப் பெற பாஜக விரும்புகிறது. வாக்காளர்களுக்குக் காட்ட பாஜகவிடம் பெரிய சாதனைகள் எதுவும் இல்லை” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/mangaluru-cooker-blast-bjps-diversionary-tactic-karnataka-congress-chief-dk-shivakumar-stokes-controversy-559704/