சனி, 1 ஏப்ரல், 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களில் 31 பேருக்கு கொரோனா!


01 04 2023 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 31 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று,
அதிகரித்து வந்தது. இந்நிலையில் , நேற்று முன்தினம் 20 பேருக்கும்,
நேற்று 11 பேருக்குமாக மொத்தம் 31 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்
முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ஊழியர்கள் மற்றும் நோயாளிகளும்
மாஸ்க் அணிந்துள்ளார்களா, என்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர்
மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து , மேயர் மகேஷ் செய்தியாளர் இடம் கூறும்போது, கொரனவை தடுக்க
அனைத்து தரப்பினருக்கும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் , வெளியில் இருந்து வருபவர்கள் மாஸ்க் அணிந்து உள்ளார்களா என்ற பரிசோதனைக்கு பின்னரே, மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

—கு.பாலமுருகன்



source https://news7tamil.live/in-kanyakumari-31-people-have-tested-positive-for-corona-in-the-last-two-days.html