ஆழ்கடலில் சுரங்கம் அமைப்பது தொடர்பான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஐ.நா சபை தெரிவித்துள்ளது.. சுரங்கம் அமைப்பதற்கான தெளிவான நெறிமுறைகள் இல்லாதபோது, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆழ்கடலில் சுரங்கம் அமைப்பது தொடர்பான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஐ.நா சபை தெரிவித்துள்ளது. கடல்சார் சட்டங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அமைப்பான சர்வதேச கடற்படுகை ஆணையத்திடம் 2 வாரங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வருகின்ற ஜூலை மாதம் முதல், கடல் பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான விண்ணப்பங்களை நிறுவனங்கள் அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் சுமார் 4 முதல் 6 கிலோமிட்டரில், பாறைகள் தோன்றும் இதை பாலிமெட்டாலிக் நோடுலஸ் (polymetallic nodule) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பாறைகள், உருளைகிழங்கின் வடிவில் இருக்கும். இந்நிலையில் இதில் இருக்கும் கோபால்ட், காப்பர், நிக்கெல், மான்கனீஸ் ஆகியவற்றை எடுக்க, இந்த ஆழ்கடல் சுரங்கம் அமைக்கப்படுகிறது.
ஜமைக்காவை தலைமையிடமாக கொண்ட ஐ.எஸ்.ஏ அமைப்பு, கடல் மற்றும் சமுத்திரத்தின் பரப்பளவின் மீது உரிமை கொண்ட அமைப்பாகும்.
இந்த ஐ.எஸ்.ஏ அமைப்பு, வரையறைப்படி, ஜூலை 9 முதல், கடலில் சுரங்கம் அமைக்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள், விண்ணபிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதத்திற்கு முன்பாக, ஆழ்கடல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ’ஆழ்கடலில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தெளிவான வழிமுறைகள். இல்லை என்றும் இது தொடர்பாக விவாதிக்க ஜூலையில் வழங்கப்படும் 2 வாரங்கள் குறைந்த கால அவகாசம் என்றும் ‘ பெல்ஜிய தூதர் ஹூகோ வர்பிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் சுரங்கம் அமைப்பதால், கடலின் மேல்பரப்பு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெரிதாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடலின் இயல்பு தன்மை பாதித்தால், காலநிலை மாற்றம் ஏற்படும் என்றும் சில நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்கடலில் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தெளிவான வழிமுறைகளை வடிவமைக்காமல், இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள், தெரிவித்துள்ளனர்.
2 4 23
source https://tamil.indianexpress.com/explained/un-to-start-allowing-deep-sea-mining-operations-from-july-626057/