சனி, 3 ஜூன், 2023

பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொண்டால், ஊட்டச்சத்து வாங்கித் தருவதாக கூறிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்

 பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொண்டால். விளையாடுவதற்கான ஊட்டச்சத்தை வாங்கித் தருவதாக” பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தார் என்று பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரங்கனை தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டத்தை நோக்கி, பயணித்த வீரர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். இவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் போராடி 7 மல்யுத்த வீரர்களின் ஒருவர் , டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் காவல்நிலையத்தில் ஏர்பரல் 21ம் தேதி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அதில் அவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டு பின்வருமாறு: “முக்கிய சாம்பியன்ஷிப் போட்டியில் நான் தங்கம் வென்றேன். பிரிஜ் பூஷன் சரண் சிங்அன்று அவரது அறைக்கு என்னை அழைத்தார். என்னை வலுக்கட்டாயமாக அவரது படுக்கையில் அமர வைத்து, என்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார். மேலும் இதை பொருத்துகொண்டால், ஊட்டச்சத்து வாங்கித் தருவதாக கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 7ம் தேதி இதுபோல வேறு இரண்டு மல்யுத்த வீரர்களால் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 3 புகாரை  அடிப்படையாக வைத்து பார்த்தால்,  8 முறை பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். போட்டியின் போது, பயிற்சின்போதும் அதுபோல இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அலுவலகத்திலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது              .

பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்பதற்காக மல்யுத்த வீரர் 1, மல்யுத்த வீரர் 2 மற்றும் மல்யுத்த வீரர் 3 என்று வைத்துகொள்வோம். மல்யுத்த வீரர் 3வது நபர் அவரது புகாரில் “ அந்த நாளை பற்றி விவரிப்பதே பெரும் மன அழுத்தத்தை கொடுக்கிறது. நான் பதக்கம் வென்ற அந்த இரவில் என்னை அவர் வலுகட்டாயமாக கட்டியணைத்தார். நான் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் எனது தாய்யின் தொலை பேசி எண்ணுக்கு தொடர்ந்து அழைத்தார். எனது தனிப்பட்ட மொபைல் எண்ணை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

மேலுல் அந்த புகாரில் “ பதக்கம் வென்ற அன்று, ஓய்வு அறையில் இருந்தேன். அப்போது பிசியோ தெரபிஸ்ட், பிரிஜ் பூஷன் சரண் சிங், தன்னை பார்க்க வேண்டும் என்று அழைத்தாக சொன்னார். என்னை வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் அழைப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் என்னை அவர் படுக்கையில் வலுகட்டாயமாக அமர வைத்து, கட்டியணைத்தார். இந்நிலையில் நான் அழத் தொடங்கினேன். இந்நிலையில் தொடர்ந்து என்னை தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்தார். எனது அம்மாவின் தொலைபேசியில் கூட அழைத்தார். அப்படி ஒரு முறை அழைக்கும்போது, ’பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொண்டால், விளையாடுவதற்கான ஊட்டச்சத்து வாங்கித் தருவதாக கூறினார்” இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபோன்று அவர் நடந்துகொள்வதால், அவரை சந்திக்கும் வாய்ப்பை மல்யுத்த வீராங்கனைகள் தவிர்ப்பதாகவும், பாதிக்கப்பட்ட 3 வது மல்யுத்த வீராங்கனையும் அவரை சந்திக்கும் வாய்ப்பை தவிர்ப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவதால், போட்டிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்பதால்,  தற்போது புகார் கொடுத்துள்ளோம் என்று பாதிக்கப்பட்ட 3 வது மல்யுத்த வீராங்னை தெரிவித்துள்ளார்.

இதுபோல் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த மல்யுத்த வீரர் 1 மற்றும் மல்யுத்த வீரர் 2 குறிப்பிடுகையில் “ மூச்சு விடும் முறையை சோதனை செய்கிறேன் என்று வயிற்று பகுதியிலும், மார்பங்களிலும்  பிரிஜ் பூஷன் சரண் சிங் தவறாக தொட்டார்” என்று குறிப்பிட்டனர். மல்யுத்த வீரர் 2 குறிப்பிடுகையில் “ 2018ம் ஆண்டு, நான் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, பயிற்சி உடையை மேலே இழுத்து, வயிற்றையும், மார்பகத்தையும் தொட்டார். எனது அனுமதியின்றி இது  நடைபெற்றது. மூச்சுவிடும் முறையை சோதனை செய்ய இப்படி செய்ததாகவும் கூறினார்” என்று அவர் கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/india/brij-bhushan-offered-to-buy-me-supplements-if-i-gave-in-to-sexual-advances-wrestler-685739/