13 6 23

திருவண்ணாமலை படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், வீடியோ மூலம் தமிழக டிஜிபிக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதற்கிடையில், ராணுவ வீரர் பிரபாகரன் பொய் தகவலுடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக உறவினர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியானது.
அந்த ஆடியோவில், “நான் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்கிறேன் என்பது இன்று மதியத்துக்குள் தெரியும். நாம் தமிழர், பாஜக என முக்கியக் கட்சிகள் வீடியோவை பார்த்துள்ளனர். 6 கோடி பேர் வரை வீடியோவை பார்த்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக பேசிய மாவட்ட எஸ்.பி, கார்த்திகேயன், “இந்த வழக்கில் பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருள்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர, கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை” என்றார்.
முன்னதாக பிரபாகரன் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை, அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர் கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர்” எனப் புகார் அளித்திருந்தார்.
ராணுவ வீரரின் வீடியோ அதன்பின்னர் வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/a-sudden-twist-in-the-soldiers-complaint-695348/