7 6 23
கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு 2021-ஆம் ஆண்டு ஜீன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இதில் சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய கோரியும், விளக்கம் கேட்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள், கோவில்களையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டுமென கூறப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என சட்டம் இயற்றும்படி நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல் கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது எனவும், தற்போது மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், கோயில் அறங்காவலராக அரசியல்வாதிகளை நியமிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்துள்ளனர்.
அனகா காளமேகன்
source https://news7tamil.live/central-accounts-department-audit-of-temple-income-will-not-disenfranchise-state-government-madras-high-court.html