8 6 23
தென் தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காற்றின் வேகம் தற்போது இயல்பை விட மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் காற்றாலை முன்னணி பங்கு வகிக்கிறது. குறிப்பாகத் தென் தமிழகமான திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலைகள் உள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் உள்ளிட்ட பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்குப் புகழ்பெற்றவையாகும்.கடந்த சில மாதங்களாக அதிகரித்த வெயிலின் தாக்கம் மற்றும் இயல்பை விட காற்றின் வேகம் மிக குறைந்தது.
இதனால் காற்றாலை மின் உற்பத்திகள் கடுமையான இழப்பை சந்தித்தன.ஆனால் தற்போது தென் தமிழகத்தில் காற்றின் வேகம் மெல்ல,மெல்ல அதிகரிக்கத்
தொடங்கியுள்ளது.இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 6ஆயிரம் யூனிட் வரை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.
காற்றின் வேகமும் விநாடிக்கு 4மீட்டர் அளவிலிருந்து 16மீட்டராக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக 500கிலோ வாட் சக்தியுடைய காற்றாலையில் தினமும் 6ஆயிரம் யூனிட் மின்சாரமும்,600யூனிட் சக்தியுடைய காற்றாலையில் 8500 யூனிட் மின்சாரம் வரையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தற்போது காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் வேறு பகுதிக்கு கொண்டு செல்வதால் மின்சார இழப்பு ஏற்படுகிறது.இதனை தடுக்க கெபாசிட்டர்கள் அமைக்க வேண்டும் என்றனர்.திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் சுமார் பத்தாயிரம் காற்றாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
-வேந்தன்
source https://news7tamil.live/kanniyakumari-windmill-current.html