6 6 23
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் பொறியியல் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. விண்ணப்பப்பதிவுக்கான அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தம் 2,29,167 மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில், 190 – 200 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண்களில் உள்ளவர்களுக்கு எந்தக் கல்லூரியில் எந்த சீட் கிடைக்க வாய்ப்புள்ளது
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நம்பர் 1 கல்லூரியான எஸ்.எஸ்.என் கல்லூரியில் 190 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுவாக 190 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு டாப் மோஸ்ட் கல்லூரிகளிலே இடம் கிடைக்கும். இடஒதுக்கீட்டு பிரிவினரில் 185 மதிப்பெண்களுக்கே டாப் மோஸ்ட் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
மாணவர்கள், என்ன கோர்ஸ் படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, சாய்ஸ் ஃபில்லிங் செய்யவும். அதாவது மாணவர்கள் தங்கள் மாவட்டத்திலோ அல்லது தங்களுக்கு அருகாமை மாவட்டத்திலோ படிக்க விரும்பினால், அங்கு எந்த கல்லூரி சிறந்தது எனத் தெரிந்துக் கொண்டு, சாய்ஸ் ஃபில்லிங்கின்போது அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
ஒருவேளை நீங்கள், 190 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களாக இருந்து, உங்களால் சிறந்த தனியார் கல்லூரிகளில் படிக்க போதிய நிதி ஆதாரம் இல்லை என்றால், நீங்கள் சிறந்த கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அவர்களை அணுகினால், குறைவான கட்டணத்திலோ அல்லது கட்டணம் இல்லாமலோ படிக்க வாய்ப்புள்ளது. ஆனால், சிறந்த கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிப்பது முக்கியம்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2023-engineering-counseling-college-wise-cut-off-analysis-689050/