புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய 10 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் மெட்ரோ ரயில் சேவை 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. புழுதிப் புயல் மற்றும் மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டில்லியில், சில நாட்களாக, கடுமையாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், டில்லியில் நேற்று காலை முதல், உக்கிரமான வெயில் தாக்கியது. மாலை, வானிலை முற்றிலுமாக மாறி, வானம், மேகமூட்டமாக காணப்பட்டது. பின், திடீரென பலத்த சூறைக்காற்றுடன், பல பகுதிகளில், புழுதிப் புயலுடன் மழை பெய்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன; மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 'ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், தெலுங்கானா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், கர்நாடகாவின் உட்பகுதிகள், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில், பலத்த காற்று வீசக்கூடும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.