வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ஆளுநர் இன்று டெல்லி பயணம் – திமுக போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அவசர பயணம்..!

 

திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு குரோம்பேட்டை மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் இரண்டு முறை முயற்சித்தும் உரிய இடம் கிடைக்காததால் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வம் சேகரும் மறுநாள் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

மாணவன் ஜெகதீஸ்வரனின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு விலக்கு மற்றும் ஆளுநரை கண்டித்து திமுக நாளை மறுதினம் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ள் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


source https://news7tamil.live/governor-rn-ravi-to-visit-delhi-today-urgent-trip-as-dmk-announces-protest.html

Related Posts: