செவ்வாய், 28 ஏப்ரல், 2020

செக் குடியரசு மேயரை கொல்ல திட்டமிட்டதா ரஷ்யா?

credit ns7.tv
Image
செக் குடியரசு நாட்டின் தலைநகரான பிரேக் (Prague) நகர மேயர் Zdeněk Hřib-ஐ கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Prague நகர மேயர் Zdeněk Hřib தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் தான் இரண்டு வாரங்களாக காவல்துறை பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா தன்னை குறிவைத்துள்ளதா என்பதையும் எவ்வகையிலான அச்சுறுத்தல் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.
செக் குடியரசு நாட்டின்  Respekt பத்திரிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது, அதில் ரஷ்ய தூதரக கோப்புகளுடன் Prague நகர மேயர் Zdeněk Hřib மற்றும் ஒரு அரசியல்வாதியை கொல்லும் நோக்கில் ricin என்ற கொடிய விஷம் அடங்கிய பையுடன் ஒருவர் Prague நகரத்துக்குள் நுழைந்துள்ளதாக கூறியிருந்தது.
எனினும் இதனை ரஷ்யா மறுத்துள்ளது.
செக் குடியரசு நாட்டின் மேயரை, ரஷ்யா எதற்காக கொல்ல வேண்டும்?
ரஷ்யாவில் ஹீரோவாக வர்ணிக்கப்படும் பனிப் போரில் ஈடுபட்ட சோவியத் ராணுவ தளபதி Ivan Konevக்கு Prague நகரில் வைக்கப்பட்டிருந்த சிலை, நகர மேயரின் மேற்பார்வையில் கடந்த மாதம் அகற்றப்பட்டது.

இது ரஷ்யாவுக்கு பெருத்த கோவத்தை ஏற்படுத்தியதுடன் தூதரக ரீதியில் எதிர்ப்பையும் பதிவு செய்தது. இதன் காரணமாகவே மேயரை கொல்ல ரஷ்யா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.