166% மடங்கு அதிக விலையுடன் இந்த கிட்களை விற்பனை செய்வது மானக்கேடானது என்றும், மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் குற்றச்சாட்டு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரிசோதனயை விரைவில் நடத்தி முடிக்க தேவையான ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. ரூ. 225-க்கு வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்களை ரூ. 600-க்கு மாநில அரசுகளுக்கு விற்பனை செய்துள்ளது என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேசியிருக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், கொரோனா வைரஸ் கிட்கள் வாங்கியதிலும் ஊழலா? பிரதமர் இதில் தலையிட்டு பிரச்சனையை தீர்ப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய ட்வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு வாங்கப்பட்ட ஒரு ரேபிட் கிட்டின் விலையை குறிப்பிட்டு, மாநில அரசுகளுக்கு விற்பனை செய்த விலையையும், 166% அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவும் வோண்ட்ஃபோ நிறுவனத்திடம் இருந்து கொரோனா வைரஸிற்கான டெஸ்ட் கிட்டினை 3 டாலர்கள் என்ற விலைக்கு இறக்குமதி செய்தது இந்தியா. ஃப்ரைட் சார்ஜூடன் சேர்த்து இத விலை ரூ. 245 ஆக நிர்ணயக்கப்பட்டது. இந்திய மெடிக்கல் கவுன்சில் சுமார் 5 லட்சம் ரேபிட் கிட்களை மார்ச் 27 மற்றும் 28 தேதிகளுக்கு ஆர்டர் செய்தது.
மேட்ரிக்ஸ் லேப் நிறுவனம், ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனத்திற்கு விநியோகஸ்தர் விலைக்கு ரூ. 400க்கு விற்பனை செய்கிறது. ஆனால் ஐ.சி.எம்.ஆர்க்கு ரூ. 600க்கு இந்த கிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் ஜி.எஸ்.டி. இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற இக்கட்டான சூழலிலும், ஜி.எஸ்.டியுடன், 166% மடங்கு அதிக விலையுடன் இந்த கிட்களை விற்பனை செய்வது மானக்கேடானது என்றும், மனிதாபிமானம் அற்ற செயல் என்றும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
BJP corona Corruption
இது தொடர்பாக மோடி பேச வேண்டும் என்றும் இதற்கான விளக்கத்தினை அளிக்க வேண்டும் என்றும் பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளனர். தற்போது #BJPCoronaCorruption என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதைப் பற்றி 1,544 பேர் பேசுகிறார்கள்
https://tamil.indianexpress.com/india/some-earning-profits-in-sale-of-covid-19-test-kits-to-govt-pm-must-intervene-congress-187128/
முக ஸ்டாலின் கேள்வி
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு ஏன் இறக்குமதிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை.
ரூ. 245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட்கிட்டிற்கு, அதிமுக அரசு ரூ.600 ரூபாய் கொடுத்தது ஏன்? ICMRன் அங்கீகாரமில்லாத நிறுவனத்திற்கு கொள்முதல் ஆர்டரைக் கொடுத்தது ஏன்?
இதைப் பற்றி 2,164 பேர் பேசுகிறார்கள்