31 7 23
தமிழக அரசு ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டன.
இதற்கிடையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது. மேலும், இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது.
தொடர்ந்து டெண்டர் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின் போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/smart-electricity-meter-tender-cancelled-732924/