நாடாளுமன்ற மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியைச் சேர்ந்த திமுக எம்.பி. பேசுகையில், “மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நடந்த வன்முறையில் இதுவரையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏறத்தாள 65 ஆயிரம் பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடுமையை பேசினார். அப்போது அவர், “மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர்.
அந்தப் பெண்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.
அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆக.8 மற்றும் 9ஆம் தேதிகளில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது ஆக.10ஆம் தேதி பதில் அளிக்கப்பட உள்ளது.
source https://tamil.indianexpress.com/india/mp-tr-balu-questioned-why-is-prime-minister-narendra-modi-silent-on-the-manipur-issue-736414/