நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின்போது தொல். திருமாவளவன் எம்.பி பேசுகையில், “மணிப்பூர் விவகாரம் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது; இந்து ராஷ்டிரா அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அழித்தொழிப்போம், அதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம் என்று பாஜகவினர் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.
குஜராத், ஹரியானா மட்டுமல்ல, ஜெய்ப்பூர் ரயிலில் காவலர் ஒருவர் இஸ்லாமியர்களைத் தேடிச் சென்று, 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி, அஞ்சி வாழும் அவலம் இருக்கிறது. சிறுபான்மையினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, பெரும்பான்மை இந்து சமூகத்தினரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளன. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.
பட்டியலின மற்றும் பழங்குடியின (SC\ST) மற்றும் OBC மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை; கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டே இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும்” என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-speech-on-no-confidence-resolution-736380/