புதன், 9 ஆகஸ்ட், 2023

பிரதமரின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் : காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் அதிரடி

 

Congress
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய்

பிரதமர் மோடியில் மௌனத்தை கலைக்கவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கௌரல் கோகோப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக பெரிய வன்முறை வெடித்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் “மௌன சபதத்தை” முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள இந்திய கூட்டணி இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது எண்ணிக்கையை சார்ந்தது அல்ல, மணிப்பூருக்கான நீதியைப் பற்றியது. இந்த சபை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கிறேன். மணிப்பூருக்காக இந்தியா கூட்டணி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. மணிப்பூருக்கு நீதி தேவை என்றும் கூறியுள்ளார்.

மே 3 அன்று வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதன்முதலில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இறந்தபோதே மணிப்பூர் பாஜக அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. பிரதமர் தனது இரட்டை இயந்திர அரசாங்கம், மணிப்பூரில் அவரது அரசாங்கம் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான், மணிப்பூரில் 150 பேர் இறந்தனர். சுமார் 5,000 வீடுகள் எரிக்கப்பட்டன, சுமார் 60,000 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

சுமார் 6,500 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ”என்று கூறிய கோகோய் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தை சூழலை உருவாக்க வேண்டிய மாநில முதல்வர், கடந்த 2-3 நாட்களில் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் தூண்டுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கடைசி நிமிடத்தில் ராகுல் காந்தியின் பெயர் ஏன் திரும்பப் பெறப்பட்டது என்று கேட்டதை தொடர்ந்து, கீழ்சபை எதிர்க்கட்சிகளுக்கும் கருவூல பெஞ்சுகளுக்கும் இடையே காரசாரமான விவாரதம் நடந்தது.

வன்முறை மோதல்களால் உலுக்கிய மணிப்பூர் மாநிலத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் வருகை தந்தபோது, மணிப்பூருக்கு பிரதமர் மட்டும் ஏன் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பிய கோகோய் அவர் (பிரதமர் மோடி) மணிப்பூர் பற்றி பேசுவதற்கு 80 நாட்கள் எடுத்துக்கொண்டு ஏன் 30 வினாடிகள் மட்டும் பேசினார்?

அதன் பிறகு அவரிடமிருந்து மணிப்பூர் குறித்து எவ்வித பதிலும் இல்லை. அமைச்சர்கள் பேசுவார்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் பிரதமராக, அவரது வார்த்தைகளின் சக்தியை அமைச்சர்களால் ஈடு செய்ய முடியாது, ஒரு இந்தியா இரண்டு மணிப்பூர்களை உருவாக்கியுள்ளது – ஒன்று மலைகளிலும் மற்றொன்று பள்ளத்தாக்கிலும்” என்று அரசாங்கம் பேசுவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கோகோய் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/compelled-to-move-no-confidence-motion-to-end-pm-modi-vow-of-silence-congress-gaurav-gogoi-736317/