புதன், 13 செப்டம்பர், 2023

கலைஞர் மகளிர் உரிமை தொகை: 35% விண்ணப்பம் நிராகரிப்பு ஏன்? காரணம் இதுதான்!

 12 9 23

rejected

கலைஞர் மகளிர் உரிமை தொகை: 35% விண்ணப்பம் நிராகரிப்பு ஏன்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மொத்த விண்ணப்பத்தில் 65% விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் 35% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 35% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் நிராகரிக்கப்பட்டது குறித்த தகவல்கள் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டின் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை பார்ப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-reasons-for-35-per-cent-application-rejected