இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் அண்மையில் நடைபெற்றபோது, எதிர்கால திட்டங்களை வகுக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முதல் கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் டெல்லி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி. வேணுகோபால், தி.மு.க.சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமூல் காங்கிரஸ் கட்சிலிருந்து அபிஷேக் பானர்ஜி, சிவசேனா- உத்தவ் பிரிவில் இருந்து சஞ்சய் ராவுத்,ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
சமூக ஊடகக் குழு, பிரசாரக் குழு, ஆராய்ச்சிக் குழு போன்ற துணைக் குழுக்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
source https://news7tamil.live/the-first-meeting-of-the-india-alliance-coordination-committee-will-be-held-in-delhi-today.html