வியாழன், 14 செப்டம்பர், 2023

நிபா வைரஸ் பரவல், பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் : புதுச்சேரி அரசு உத்தரவு!

 

நிபா வைரஸ் பரவல், பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் : புதுச்சேரி அரசு உத்தரவு!


14 09 23

நிபா வைரஸ் பரவல் காரணமாக மாஹேவில் உளள பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியின் ஒரு பிராந்தியமான மாஹே கேரள மாநிலத்தில் நிபா வைரஸ்
அதிகம் பாதித்த கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ளது. ஆகவே அங்கிருந்து
புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது
என்பதால் புதுச்சேரி அரசு  எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி
நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்,

கைகளை கழுவ வேண்டும், சானிடரைஸ் பயன்படுத்த வேண்டும், வகுப்பறைகளில் சமூக
இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை
புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின் பேரில் பிராந்தியத்திய நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாஹே பிராந்தியத்தில் நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்க  வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். மாஹே பிராந்தியத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணஙகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/nipah-virus-spread-masks-mandatory-in-schools-puducherry-government-orders.html

Related Posts: