07 12 2023
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 7 இன்று வரை 384.5 மி.மீ மழைப் பதிவாக வேண்டிய நிலையில் 371.9 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பிலிருந்து 3 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த டிச. 3-ம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் வலுப்பெற்று நெல்லூர்-மசூலிப்பட்டினம் அருகே டிச. 5-ல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. மிக்ஜம் புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒரு சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது, வீடுகளில் மழை நீர் புகுந்தது, மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, மின்சாரம் தடை என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். புயல் கடந்து மூன்று நாள்கள் ஆகியும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/northeast-monsoon-in-tamil-nadu-3-less-than-normal-chennai-meteorological-center-information.html