வியாழன், 7 டிசம்பர், 2023

சென்னையை புரட்டிப் போட்ட கனமழை

 

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.  இது குறித்து  வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் தொடர்ந்து களத் தகவல்களை அளித்து வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை நின்று 2 நாட்கள் ஆகியும் சென்னை அரும்பாக்கம் – கோயம்பேடு பிரதான சாலையில் மழை நீர் இன்னும் வடியவில்லை.  இது குறித்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் வழங்கிய கூடுதல் தகவலின் காணொலி:

அரும்பாக்கம் - கோயம்பேடு சாலையில் இன்னும் வடியாத மழை நீர் | தீராத துயரத்தில் மக்கள் | Koyambedu
செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது.
இது குறித்த கூடுதல் தகவல்களை நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் சாலமன் வழங்கியனார். அதன் காணொளி:
செங்கல்பட்டு பகுதிகளில் நீர் சூழ்ந்ததால் தனித்தீவாக காட்சி

 

சென்னை வேளச்சேரி விஜயா நகர்,  டான்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.  இது குறித்து களத்தில் இருந்தபடி நமது செய்தியாளர் ரேவதி தொடர்ந்து தகவல்களை வழங்கினார்.  அது தொடர்பான காணொலி:

விஜயா நகர், டான்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீர்

சென்னை வேளச்சேரியில் மழை நின்றும்,  சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் வடியாததால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  ஏராளமான கார்கள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  அதன் பருந்து பார்வை காட்சிக்கான காணொலி:

வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி // ஏரி போல் காட்சியளிக்கும் தாம்பரம் - வேளச்சேரி சாலை பருந்து பார்வை

 

 

source https://news7tamil.live/heavy-rains-that-overturned-chennai-news7-tamil-in-flood-affected-areas.html