வியாழன், 25 ஏப்ரல், 2024

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் சதமடித்த வெயில்!

 

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் சதமடித்த வெயில்!


24 4 24

தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில்,  அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 101.66°F, கோயம்பத்தூர் 101.84°F, தர்மபுரி 105.26°F, கரூர் பரமத்தி 105.8°F, மதுரை நகரம் 101.12°F, மதுரை விமான நிலையம் 103.28°F, பாளையங்கோட்டை 100.58°F, சேலம் 105.98°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.52°F, திருச்சிராப்பள்ளி 104.9°F, திருத்தணி 105.08°F, வேலூர் 106.88°F என வெப்பமானது பதிவாகி உள்ளது.


source https://news7tamil.live/in-tamil-nadu-today-14-places-were-hit-by-the-sun.html#google_vignette