திங்கள், 22 ஏப்ரல், 2024

மண்ணில் புதையும் சீன நகரங்கள்; பெரும் ஆபத்தில் மக்கள்: அங்கு என்ன நடக்கிறது?

 சீனாவின் முக்கிய நகரங்களில் பாதி,  நிலத்தில், மண்ணில் மூழ்கி வருவது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நிலத்தில் இருந்து நீர் எடுத்தல் மற்றும் நகர்ப்புற கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் நகரங்கள் நிலத்தில் புதைந்து வருகின்றன என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட சீன நகரங்கள் "மிதமான மற்றும் கடுமையான" வீழ்ச்சியின் அபாயத்தை எதிர்கொள்கின்றன. சீனாவின் 45% நகர்ப்புற நிலங்கள் வருடத்திற்கு 3 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மூழ்கி வருகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட  ஒவ்வொரு சீன நகரத்திலும் விஞ்ஞானிகள் நில அளவை எடுத்து ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வு செய்த 82 நகரங்களில், சில நகரங்கள் வேகமாக புதைந்து வருவதாகவும். ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ அதிகமாக புதைந்து வருவதாகவும் குழு கண்டறிந்தது.

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் கடந்த நூற்றாண்டில் 3 மீட்டர் வரை மூழ்கிய பிறகு தொடர்ந்து தணிந்து வருவதையும், பெய்ஜிங் அதன் சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் ஆண்டுதோறும் 45 மில்லிமீட்டர் மூழ்குவதையும் அவர்கள் கண்டறிந்தனர். 

"நிலத்தடி நீர் எடுத்தல் மற்றும் கட்டிடங்களின் எடை போன்றவைகள் நிலம் பூமியில் புதைவதற்கான  காரணங்களாக உள்ளன" என்று  ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

"உயர்ந்த கட்டிடங்கள் அதிகம் கட்டப்படுகின்றன, சாலை அமைப்புகள் விரிவடைகின்றன, நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது, இவை அனைத்தும் வேகமாக செய்யப்படுகின்றன," என்று அவர்கள் விளக்கினர. புதிய கண்டுபிடிப்புகள் சீனாவிற்கு வெளியே உள்ள மற்ற நகரங்களில் கூட தேசிய பதிலின் அவசியத்தை வலுப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்


source https://tamil.indianexpress.com/technology/chinese-cities-are-sinking-warns-study-4500220